தொடர்புடைய செய்திகள்
- ’'விஜய்யின் பணி சிறக்கட்டும்’’ -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- இழந்த சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதற்கு உறுதியேற்க வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்
- 4 தொகுதி.. 1 ராஜ்யசபா எம்.பி சீட்..! சிம்பிளாக கூட்டணி டீல் பேசும் தேமுதிக!?
- 18 இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு டார்கெட் வைத்த அமலாக்கத்துறை? அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
- இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்.. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்.. அணியில் யார் யார்?
இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்களை சந்திக்கவில்லை, அவர்களுக்குள் சந்தித்தார்கள்: பிரசாந்த் கிஷோர்
இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் மக்களை சந்திக்கவில்லை என்றும் அவர்களுக்குள் ஒருவரை ஒருவரை சந்தித்துக் கொண்டார்கள் என்றும் அதனால் அவர்கள் பாஜகவை எதிர்க்க தகுதி இல்லாதவர்கள் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
பாஜகவை எதிர்க்க இந்தியா கூட்டணி என்று அமைக்கப்பட்ட நிலையில் அது ஆரம்பத்தில் அமோகமாக இருந்தது. மூன்று முறை இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை செய்தாலும் உருப்படியாக எந்த முடிவும் எடுக்கவில்லை
இந்த நிலையில் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து கொண்டார்களே தவிர மக்களும் சந்திக்கவில்லை.
ராகுல் காந்தி ஒரு பக்கம் வெளிநாடு செல்கிறார், மற்ற தலைவர்கள் வீட்டிலேயே இருந்தார்கள். அதனால் வரும் தேர்தலில் பாஜகவை வெல்வது கடினம் என்று தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran
