வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (17:54 IST)

யாரும் எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம்..! விஜய் அரசியல் பயணம் குறித்து திருமாவளவன் கருத்து

thiruma
நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தொகுதி பங்கீடு குறித்து திமுக உடனான பேச்சுவார்த்தையில் விரைவில் விசிக பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். 

2019-ல் இருந்தே பெரிய 10 கட்சிகளுடன் இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக பயணித்து வருகிறது என்றும் உரிய முறைப்படி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சுமூகமான முறையில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.  பொதுமக்களிடம் திமுக தலைமையிலான கூட்டணியே நன்மதிப்பு பெற்றுள்ளது என கூறினார். 

 
விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சி குறித்த கேள்விக்கு பதலளித்த திருமாவளவன், யாரும் எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம் என்றும் அதுதான் ஜனநாயகம், அந்த வகையில் நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.