1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (19:40 IST)

’'விஜய்யின் பணி சிறக்கட்டும்’’ -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

vijay- udhayanithi stalin
நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியுள்ளது பேசுபொருளாகியுள்ள நிலையில், சென்னையில் இன்று, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘’விஜய்யின் பணி சிறக்கட்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் லியோ திரைப்படம் வெளியானது.

தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பில் G.O.A.T என்ற படத்தில்  நடித்து வருகிறார்.

தனது மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு உதவிகள் செய்து வந்ததுடன், தனது படங்களிலும், ஆடியோ நிகழ்ச்சிகளிலும் அரசியல் கருத்துகள் தெரிவித்து வந்த விஜய் இன்று 'தமிழக வெற்றி கழகம்' என்ற  பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.

இதற்கு அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த  நிலையில், சென்னையில் இன்று, தமிழக 
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘’விஜய்யின் பணி சிறக்கட்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘’புதிய கட்சி தொடங்கியதற்கு எனது பாராட்டு. இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்க உரிமையுள்ளது. விஜய்யின் பணி சிறக்கட்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.