தொடர்புடைய செய்திகள்
- ராமர் கோவில் டிரஸ்ட் தலைவருக்கு கொரோனா
- இப்படியும் சுதந்திர தினம் கொண்டாடலாமே! – கொடிக்கு பதிலாக ட்ரெண்டாகும் மாஸ்க்!
- இ பாஸ் எப்போது வரை நடைமுறையில் இருக்கும் தெரியுமா...??
- அம்மா கோவிட் வீட்டு பராமரிப்பு திட்டம்! – மலிவு விலை கொரோனா மருத்துவ தொகுப்பு
- இரண்டே நாளில் 24 லட்சத்தை எட்டிய கொரோனா! – இந்திய நிலவரம்!
இன்னும் கோமா நிலையிலேயே பிரனாப் முகர்ஜி – மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்!
முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி மூளையில் செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இன்னமும் கோமா நிலையிலேயே இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவின் ஜனாதிபதியாக 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முதல் 2017-ம் ஆண்டு பாஜக ஆட்சி வரை பதவி வகித்தவர் பிரனாப் முகர்ஜி. இவர் மருத்துவமனையில் வேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்குக் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா சோதனைகள் செய்துகொள்ளும் படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இரு நாட்கள் கடந்துள்ல நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு வெண்ட்டிலேட்டர் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் அவர் கோமா நிலையை தாண்டவில்லை என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
