இரண்டே நாளில் 24 லட்சத்தை எட்டிய கொரோனா! – இந்திய நிலவரம்!
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ஒரே நாளில் 66 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 24 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் முதலாகவே ஊரடங்கு அமலில் இருந்து வந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 23,96,638 ஆக உள்ளது. ஒரே நாளில் 942 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47,033 ஆக உள்ளது. 16,95,982 பேர் குணமடைந்துள்ள நிலையில், 6,53,622 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.