இப்படியும் சுதந்திர தினம் கொண்டாடலாமே! – கொடிக்கு பதிலாக ட்ரெண்டாகும் மாஸ்க்!
ஆகஸ்டு 15 சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடி முகமூடிகள் ட்ரெண்டாகி வருகின்றன.
எதிர்வரும் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக கோலகலமாக மக்கள் கொண்டாடும் சுதந்திர தினம் இம்முறை கொரோனா தொற்று காரணமாக ஆடம்பரங்களின்றி கொண்டாடப்பட உள்ளது. ராணுவ அணிவகுப்புகள் உள்ளிட்டவை வழக்கம் போல நடைபெறும் என்றாலும் அவற்றை கண்டுகளிக்க மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. முக்கியமான சிலர் கலந்து கொள்ளும் நிகழ்வாகவே அது இருக்கும் என கூறப்படுகிறது.
வழக்கமாக சுதந்திர தின நாளில் மக்கள் தேசிய கொடி அட்டையை சட்டைகளில் பதிந்துக் கொண்டு வலம் வருவர். தற்போது கொரோனா பாதிப்புகள் உள்ளதால் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய கொடி வண்ண முகக்கவசங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. தேச பற்றை கொரோனா விழிப்புணர்வுடன் கொண்டாட இந்த முகக்கவசங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.