செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 29 மே 2024 (12:22 IST)

நாளை பெங்களூரு திரும்புகிறார் பிரஜ்வல் ரேவண்ணா.. கைது செய்யப்படுவாரா?

Prajwal Revanna
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா நாளை பெங்களூரு திரும்ப இருப்பதாக கூறப்படும் நிலையில் நாளை அவர் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் மே முப்பதாம் தேதி தான் பெங்களூருக்கு திரும்ப இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் நாளை அவர் பெங்களூர் திரும்ப உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் நாளை மறுநாள் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு பிரஜ்வல் ரேவண்ணா ஆஜராக இருக்கும் நிலையில் அவரிடம் ஆபாச வீடியோ வழக்குகள் குறித்து கேள்விகள் கேட்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran