வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 23 மே 2024 (09:02 IST)

இவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் கோலி படைத்த சாதனை!

ஐபிஎல் 17 ஆவது சீசனில்  நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 172 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் மூத்த வீரர்கள் பலரும் சொதப்பியதால் பெரிய அளவில் ரன்கள் சேர்க்க முடியவில்லை.

இதையடுத்து பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 17 ஆண்டு கால கோப்பை காத்திருப்பு மீண்டும் ஆர் சி பி அணிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் விரார் கோலி இந்த சீசனில் 700+ ரன்களை சேர்த்து சிறப்பாக விளையாடிய போதும் அவர்களால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியவில்லை.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் விராட் கோலி ஒரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளார் .ஐபிஎல் தொடரில் அவர் 8000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்த படியாக ஷிகார் தவான் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் உள்ளனர்.