பாலியல் வழக்கு.! மே 31ல் விசாரணை ஆஜராகும் பிரஜ்வல் ரேவண்ணா..!
ஆபாச வீடியோக்கள் வைத்திருந்தது தொடர்பாக கர்நாடகா சிறப்பு விசாரணை குழுவால் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணா வருகிற 31 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி மஜத எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வீட்டு பணிப்பெண் உட்பட 3 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டு பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைந்து வழக்கை சந்திக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வருகிற 31 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.