வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 24 மே 2024 (08:01 IST)

விராட் கோலி தன் சொந்த ஊர் அணிக்காக சென்று விளையாடி கோப்பையை வெல்லவேண்டும் – முன்னாள் வீரர் கருத்து!

ஐபிஎல் 17 ஆவது சீசனில்  நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதன் மூலம் கடந்த 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் போராடி வருகிறது ஆர் சி பி. அந்த அணிக்காக இல்லாவிட்டாலும் விராட் கோலிக்காகவது அந்த அணி கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை ஆசைப்படுகிறார்கள்.

இந்நிலையில் கோலி பற்றி பேசியுள்ள கெவின் பீட்டர்சன் “கோலி உண்மையிலேயே கோப்பை வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவர் வேறு அணிக்கு சென்று விளையாட வேண்டும். அவர் கோப்பையை வெல்ல உதவும் அணியில் விளையாடவேண்டும். அது டெல்லி அணிதான் என்று நான் கருதுகிறேன். கோலியும் டெல்லியை சேர்ந்தவர்தான். ஏன் அவர் சொந்த ஊர் அணிக்கு திரும்ப கூடாது. கோலியைப் போலவே டெல்லி அணியும் கோப்பைக்காக காத்திருக்கிறது” எனக் கூறியுள்ளார்.