திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (18:31 IST)

ரயில் நிலையத்தின் விளம்பர டிவியில், திடீரென ஒளிபரப்பான ஆபாச வீடியோ! அதிர்ச்சியில் பயணிகள்..!

ரயில் நிலையத்தின் விளம்பர டிவியில் திடீரென ஆபாச படம் ஒளிபரப்பானதை அடுத்து பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாட்னா ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் என்பதும் இந்த ரயில் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாட்னா ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த விளம்பர டிவியில் திடீரென மூன்று நிமிடத்திற்கு ஆபாச வீடியோ ஒளிபரப்பானதால் அதிர்ச்சியாக ஏற்பட்டுள்ளது. 
 
ஆபாச படவீடியோவை ஒளிபரப்பிய தனியார் ஏஜென்சியின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒப்பந்தத்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
 
பரபரப்பாக இயங்கி வரும் பாட்னா ரயில் நிலையத்தில் திடீரென ஆபாச படம் ஒளிபரப்பானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran