திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (16:31 IST)

ரயில்நிலைய தொலைக்காட்சியில் ஆபாச படம் ஒளிபரப்பு...பயணிகள் அதிர்ச்சி

பாட்னா ரயில்நிலைய தகவல் அறிக்கை பலகையில் ஆபாச வீடியோ வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

மாநிலத் தலைநகர் பாட்னா ரயில்நிலையத்தில் உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி, ஏராளமான வெளி மா நில தொழிலாளர்களும், பயணிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்ரு வழக்கம்போல் ரயில் நிலையத்தில் ரயில் வருகைக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கும்போது, காலை 9:30 மணியளவில் நடை எண் 10-ல் இருந்த தொலைக்காட்சியில், விளம்பரத்திற்குப் பதிலாக ஆபாச வீடியோ  ஒளிபரப்பானது.

இதை அங்கிருந்த பயணிகள் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.

இதுகுறித்து, சிலர் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினரிடம் புகாரளித்தனர்.அதன்பின்னர் உடன்டியாக அந்த வீடியோவை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.