வெள்ளி, 12 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 20 மார்ச் 2023 (23:50 IST)

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.8500 கோடி: பட்ஜெட்டில் அறிவிப்பு

மதுரையில் மெட்ரோ திட்டத்திற்கு ரூபாய் 8500 கோடி ஒதுக்கீடு உள்பட பல முக்கிய அறிவிப்புகளை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிவித்துள்ளார். இது குறித்த தகவல்கள் இதோ:
 
மதுரை ஒத்தகடை - திருமங்கலம் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.8500 கோடி ஒதுக்கீடு
 
சென்னையில் வெள்ள பாதிப்பை குறைக்க ரூ.320 கோடி ஒதுக்கீடு
 
ரூ.25 கோடியில் ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படும்
 
ரூ.1000 கோடியில் வடசென்னை வளர்ச்சி திட்டம்
 
கோவையில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில்
 
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு தயாராக ரூ.25000 வழங்கப்படும்
 
விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்
 
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்கு வழிச் சாலையாக மேம்பாலம் கட்டப்படும்!
 
வட சென்னை வளர்ச்சித்திட்டம் ₹1000 கோடி செலவில் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் -
 
Edited by Mahendran