400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க முடிவு: மத்திய அரசு தகவல்..!
இந்தியாவில் இன்னும் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் படிப்படியாக வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 10 வந்தே பாரத ரயில்கள் இயங்கி வருவதாகவும் இந்த ரயில்கள் அனைத்திற்கும் பொது மக்களின் ஆதரவு பெருகி வருகிறது என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
புதிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாகவும் 8000 பெட்டிகள் வரை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை - மைசூர் உள்பட இந்தியாவில் இயங்கி வரும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்திற்கும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva