1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2023 (15:01 IST)

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. 19 ஆயிரம் லிட்டர் டீசல் தரையில் கொட்டியதால் பரபரப்பு..!

train accident
அமெரிக்காவில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில் 19 ஆயிரம் லிட்டர் டீசல் தரையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு திடீரென சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சரக்கு ரயிலில் இருந்த 19,000 லிட்டர் டீசல் தரையில் கொட்டியதாக செய்திகள் வெளியாகி உள்ளன
 
டீசல் நிலப்பரப்பில் கொட்டிய நிலையில் நீர் அல்லது வனவிலங்குகளின் பாதுகாப்புகள் குறித்த எந்த அறிகுறியும் தற்போது இல்லை என வாஷிங்டன் மாநில சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்தான இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன
 
Edited by Mahendran