தொடர்புடைய செய்திகள்
- முஸ்லிம்களுக்கு தனியாக ஐடி பார்க் உருவாக்குவது சாத்தியமில்லை: டி.கே.சிவகுமார்
- நடிகை குஷ்புவை கண்டித்து அவரது இல்லம் அருகே நாளை ஆர்பாட்டம் - காங்கிரஸ்
- தொலைநோக்கு பார்வை இல்ல.. எல்லாம் அவசரகதிதான்! – அரசின் திட்டங்கள் குறித்து வானதி சீனிவாசன் விமர்சனம்!
- மக்களவை தேர்தலில் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி.. எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?
- காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு கேரண்டி கிடையாது.. சீன பொருட்கள் மாதிரி: அமித்ஷா கிண்டல்..!
தெலங்கானாவில் பாஜக வென்றால் யார் முதல்வர்': பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதி..!
தெலுங்கானாவில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பிற்படுத்தப்பட்ட ஒருவர்தான் முதல்வர் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். தெலுங்கானாவில் வரும் 30ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் மோடி அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று பாஜக முதல் முறையாக தெலுங்கானாவில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் 3 நாட்களாக தெலுங்கானாவில் நான் பிரச்சாரம் செய்யும் போது ஒரு எழுச்சியை பார்க்கிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தால், பிற்படுத்தப்பட்ட ஒருவர்தான் முதல்வர் என்றும் அதை நான் உறுதி செய்கிறேன் என்றும் தெரிவித்தார்.
தெலுங்கானா மக்களின் விருப்பத்திற்கு எதிராக பாஜக எதுவும் செய்யாது என்றும் பாஜகவின் லட்சியம் பிஆர்எஸ் கட்சியின் பிடியிலிருந்து தெலுங்கானாவை விடுவிப்பது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Siva
