1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2023 (14:17 IST)

நடிகை குஷ்புவை கண்டித்து அவரது இல்லம் அருகே நாளை ஆர்பாட்டம் - காங்கிரஸ்

பொது சமூகத்தோடு பொருந்தி வாழ தகுதி அற்றவர்கள் என்பதை புரிய வைக்க பெரும் மக்கள் திரட்சியுடன் கூடிய ஆர்பாட்டம் நாளை செவ்வாய்கிழமை குஷ்புவின் இல்லம் அருகே நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் தமிழ்நாடு எஸ்.சி துறை தலைவர் எம்பி ரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''குஷ்புவின் டிவிட்டர் பதிவுக்கு ஒரு நபரின் பதிலை விமர்சன ரீதியாக எதிர் கொள்ளமுடியாமல் "எனக்கு உன்னை மாதிரி சேரி மொழி பேச தெரியாது என்று பொது வெளியில் பேசிட்டு. வருத்தம் தெரிவிக்க சொன்னா முடியாது வேளச்சேரி இல்லையா செம்மஞ்சேரி இல்லையா முடிந்தா வா அப்படி தான் பேசுவேன்" என்று ஆணவத்தில் பேசி கொண்டு இருக்கிறார்.

 
சேரியிலிருந்து பல ஜனாதிபதிகளும், முதல்வர்களும், நாடாளுமன்றத்தை வழிநடத்தும் சபாநாயகர்களும், சட்டம் இயற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்று பல ஆளுமைகள் உருவான பிறகும் அந்த பகுதிக்குனு ஒரு அடையாளம், அந்த மக்களுக்கு என்று ஒரு அடையாளம் அந்த மொழி நம்ம பேசுற மொழி இல்லை, அது ரொம்ப இழிவான கேவலமான மக்கள் பேசுற மொழி என்று இந்த நாகரிக சமூகத்திலும் தொடர்ந்து நான் அதை அடையாள படுத்துவேன்
என்கிற குஷ்புவின் ஆணவம் தான் இங்கே கேள்வி குறி ?
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் குஷ்பு போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதி குஷ்பு குறிப்பிட்ட சமூக மக்கள் 30 சதவிகிதம் வாழும் பகுதி. ஓட்டுக்காக அவர்களை கட்டிபிடித்து அவங்க வீட்டு தண்ணீரை குடித்த குஷ்புக்கு அவங்க மொழி மட்டும் இப்ப அருவெறுப்பாக தெரிகிறதா ?
 
சக மனிதனை சமமாக நடத்தும் மனநிலைக்கு பெரும்பகுதி மக்கள் மாறி வரும் தற்போதைய நிலையில் அந்த அடையாளத்தை விழாமல் தக்க வைக்க பாசிசத்துக்கு துணைபோகும் அடிமை தனத்தை தான் எலைட் வாழ்க்கை வாழும் குஷ்பு இங்கே தொடர்ந்து நிலைபடுத்த விரும்புகிறார்.
 
எவ்வளவு சமூக முன்னேற்றமும் பொருளாதார தன்னிறைவு அடைந்தாலும் அம் மக்களை என்றும் பொது சமூகத்தில் இருந்து அடையாளபடுத்தி விலக்கி தான் பார்ப்பேன் என்று சூளுரைக்கும் குஷ்புக்கள் வேரறுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. கருவறுக்கப்பட வேண்டியவர்கள்.
 
இவரை போன்றவர்கள் பொது சமூகத்தோடு பொருந்தி வாழ தகுதி அற்றவர்கள் என்பதை புரிய வைக்க பெரும் மக்கள் திரட்சியுடன் கூடிய ஆர்பாட்டம் நாளை செவ்வாய்கிழமை குஷ்புவின் இல்லம் அருகே நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.