மக்களவை தேர்தலில் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி.. எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?
மக்களவை தேர்தலில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் கூட்டணி என்றும் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்பட ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் பாஜக தெரிவித்துள்ளது
\மகாராஷ்டிராவில் உள்ள மொத்தம் 48 தொகுதிகளில் ஆய்வு செய்ததில் எந்தெந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு எங்கெங்கு உள்ளது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் அதே போல் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக 26 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் மீதமுள்ள 22 தொகுதிகளில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் இது இறுதி முடிவு அல்ல என்றும் சூழ்நிலையை குறித்து ஒரு சில தொகுதிகள் வேறுபாடு ஆகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva