திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (08:27 IST)

பாஜகவின் குறிக்கோள் புதிய பஞ்சாப்! – காணொலியில் பேசிய பிரதமர்!

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காணொலி மூலமாக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி புதிய பஞ்சாபை உருவாக்குவதே நோக்கம் என தெரிவித்துள்ளார்.

பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பஞ்சாபில் பாஜக வெற்றியை பெற தீவிரமாக முயற்சித்து வருகிறது.

முன்னதாக பஞ்சாப் சென்ற பிரதமர் மோடியின் காரை போராட்டக்காரர்கள் வழிமறித்த சம்பவத்திற்கு பிறகு பிரதமர் தற்போது நேரில் செல்லாமல் காணொலி மூலம் பஞ்சாபில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் “புதிய பஞ்சாப்பை உருவாக்குவதே பா.ஜ.க.வின் குறிக்கோள். எங்களிடம் தொலைநோக்கு பார்வையும் பணியின் சாதனையும் உள்ளது. கர்தார்பூர் சாஹிப்பை காங்கிரசால் இந்தியாவில் வைத்திருக்க முடியவில்லை. ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக சிலர் பஞ்சாபை பயங்கரவாத தீயில் எரிய விடுகிறார்கள்” என்று பேசியுள்ளார்.