1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PM Modi again visit tamil nadu

பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழகம் வருகை.. நெல்லையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..!

Modi
பிரதமர் மோடி கடந்த சில நாட்களாகவே தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மீண்டும் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தேசிய கட்சியின் தலைவர்கள் தமிழகம் நோக்கி வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பல தேசிய தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்கனவே சில முறை தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி இன்று மீண்டும் வர இருப்பதாகவும் அவர் தென் மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
குறிப்பாக நெல்லையில் இன்று மாலை நடைபெற இருக்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார் என்றும் அதேபோல் அம்பாசமுத்திரம் பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரதமர் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
வீடு வீடாக குக்கர் வழங்கியது யார்? பறக்கும் படை வந்ததும் தெறித்து ஓட்டம்..!