1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (18:50 IST)

அம்பேத்கரே திரும்ப வந்தாலும் அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க முடியாது!' - பிரதமர் மோடி

Modi
அரசியலமைப்புச் சட்டத்தை எழுதிய அம்பேத்கர் திரும்ப வந்தாலும் அதை அழிக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்
 
பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் நான் மீண்டும் வெற்றி பெற்றால் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்திற்குஆபத்து என்று எதிர் கட்சியினர் கூறுகின்றனர் 
 
ஆனால் அரசியலில் அமைப்பு சட்டம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அதை இயற்றிய அம்பேத்காரே மீண்டும் திரும்பி வந்தால் கூட அதை அழிக்க முடியாது என்றும் அரசியலமைப்பு சட்டம் முழுவதும் அரசு சொந்தமானது என்றும் தெரிவித்தார் 
 
ஏற்கனவே அவசர நிலையை அமல்படுத்தி அரசியல் அமைப்பை அழிக்க காங்கிரஸ் முயற்சி செய்தது என்றும் அவர் கூறினார். நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலில் அமைப்பு சட்டத்தை திருத்தி விடுவேன் என்று கூறி மக்களை எதிர்க்கட்சிகள் முட்டாளாகின்ற என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran