1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. plus two student killed in instagram love

இன்ஸ்டா காதலை நம்பி போய் உயிரைவிட்ட பிளஸ்டூ மாணவன் - கேரளாவில் அதிர்ச்சி

murder
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் என்கிற பகுதியை சேர்ந்தவர் அபிராம். இவர் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அபிராம் காணாமல் போனார். அதன் பின் அவர் அவரின் உடல் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையில் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் அவரை நேரில் சந்திக்க அழைத்ததால் அவரை சந்திக்க அபிராமி சென்றது தெரியவந்தது.  பெண்ணை சந்திக்க இடத்தில் அவரை கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண்ணின் முன்னால் முன்னாள் காதலன் இன்ஸ்டாகிராமில் ஒரு போலியான ஐடியிலிருந்து பேசி அபிராமி ஒரு காட்டுப் பகுதிக்கு வரவழைத்திருக்கிறார். அங்கு அவருடன் சேர்ந்து சிலர் அபிராமியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதன்பின் அவரின் உடலை ஓரிடத்தில் தூக்கி எறிந்து விட்டு சென்றது தெரிய வந்திருக்கிறது..

அபிராமியை கொலை செய்த அந்த நபர் அந்தப் பெண்ணை காதலித்து வந்ததாகவும் இதனால் திட்டமிட்டு அபிராமி இங்க வரவழைத்து கொலை செய்ததும், இதற்கு அந்த பெண்ணும் உடைந்தை என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பெண் மற்றும் மேலும் ஒருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஏடிஎம்-ல் திருட வந்த நபர் சொன்ன அசத்தல் பதில்: தஞ்சாவூரில் வினோத சம்பவம்...