1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. bailwan ranganathan angry on divya sathyraj

சத்யராஜ் பொண்ணு ஒரு பைத்தியம்!.. நாத்திகம் புல்லு புடுங்கப் போச்சா!.. பயில்வான் ரங்கநாதன் கோபம்..

divya
நடிகர் சத்யராஜ் கடந்த பல வருடங்களாகவே பெரியார் கொள்கைகளை பின்பற்றி பேசி வருகிறார். அதனால் அவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அதோடு அவரின் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன்பின் தொடர்ந்து தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.

மேலும், சில நாட்களுக்கு முன்பு ‘ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணை பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளமாலயே அவருடன் இணைந்து வாழலாம். குழந்தை கூட பெற்றுக் கொள்ளலாம்.. திருமணம் என்பது அவசியமான ஒன்று இல்லை’ என்று பேசியிருந்தார். இது சர்ச்சையை கிளப்பியது. ஒருபக்கம் மகளின் கருத்தை ஆதரித்து சத்யராஜும் கருத்து தெரிவித்திருந்தார்..

இதையடுத்து சத்யராஜை பலரும் திட்ட துவங்கினார்கள். சத்யராஜ் தனது சமூகத்தில்தான் திருமணம் செய்து கொண்டார். அவரின் மகன் சிபியும் சத்யராஜ் சமூகத்தில்தான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் கலப்பு திருமணம் பற்றி பேசுகிறார்கள்’ என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்,  பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ சத்யராஜ் பொண்ணு திவ்யா ஊட்டச்சத்து நிபுணர்னு சொல்றாங்க.. ஆனா அவங்க பேசுறத பாத்தா மன நோயாளி மாதிரி தெரியுது.. தமிழ் பண்பாட்டுக்கு விரோதமா சொல்லியிருக்காங்க.. என்ன பேச்சு பேசுறாங்க?. சத்யராஜ் கல்யாணம் எப்படி நடந்துச்சு தெரியுமா? வைதீகப்படி நடந்துச்சு.. அவரோட மகன் திருமணமும் அப்படிதான் நடந்துச்சு.. அப்ப பகுத்தறிவு எங்க போச்சி?.. நாத்திகம் புல்லு புடுங்க போச்சா?.. என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
வேளாங்கண்ணியில் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்!. தளபதி இப்படி செய்யலாமா?..