திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 8 ஜூலை 2020 (08:41 IST)

பெங்களூர் வாசிகளுக்கு 5000 ரூ அபராதம் – கிராமவாசிகளின் அதிர்ச்சி முடிவு!

பெங்களூரில் இருந்து கிராமங்களுக்கு திரும்புவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றன மண்டியா மாவட்டத்தின் சில கிராமங்கள்.

கர்நாடகா மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் மிகவேகமாக பரவி வருகிறது. அதுவும் தலைநகரான பெங்களூருவில் தினமும் கண்டுபிடிக்கப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அங்கு பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பலன் இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் பெங்களூர் வாசிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் முனைப்பில் இருக்கின்றனர்.

இதனால் மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது. இதனால் மாண்டியா மாவட்டத்தின் சில கிராமங்களில் பெங்களூருவில் இருந்து திரும்புவர்களை அனுமதிக்க மறுத்துள்ளனர். மீறி பெங்களூருவில் இருந்து மாண்டியா வருபவர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அதே போலா மாண்டியாவில் இருந்து யாரேனும் பெங்களூர் சென்று திரும்பினாலும் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.