செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2020 (21:35 IST)

பிரபல நடிகை சுமலதாவுக்கு கொரோனா! ரசிகர்கள் அதிர்ச்சி

நாடு முழுவதும் கொரொனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுக்காக்க அரசுடன்., அமைச்சர்கள், அரசு பிரதிநிதிகள்  களத்தில் இறங்கி சேவையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் மண்டியா தொகுதி எம்பியும், மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியும் நடிகையுமான சுமலதாவுக்கு தற்போது கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு கொரோனா தொற்று உறுதியாகிய்ள்ளது; உங்களின் ( மக்களின் ) ஆசிர்வாதத்தால் நான் வேகமாக குணமடைந்து வருகிறேன் என்று பதிட்டுள்ளார்.

இவர் 80களில் தமிழ் சினிமாவில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.