செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2020 (21:27 IST)

பிரேசில் நாட்டு அதிபருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

பிரேசில் நாட்டு அதிபருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்
பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
உலகில் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளது பிரேசில்.
 
தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் கொரோனாவுக்கு 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் பிரேசில் அதிபர் ஜாயிர் போல்சனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறி இருந்ததாகவும், இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.