1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 8 ஜூலை 2020 (07:19 IST)

ஒரே நாளில் 55,251 பேருக்கு கொரோனா பாதிப்பு: கொரோனாவின் முழு பிடியில் அமெரிக்கா

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலாவதாக உள்ள அமெரிக்காவில் தினந்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 55,251 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாட்டில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 3,097,084 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 133,972 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவை அடுத்து பிரேசில் நாட்டில் நேற்று ஒரே நாளில் 48,584 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரேசில் நாட்டில் 1,674,655 பேர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், அந்நாட்டில் 66,868 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 23 ஆயிரத்து 135 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் இந்தியாவின் மொத்த பாதிப்பு 743,481 என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 694,230 என்பதும், பெரு நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309,278 என்பதும், சிலி நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 301,019 என்பதும், ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 299,210 என்பதும், இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 286,349 என்பதும் குறிப்பிடத்தக்கது