1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Parliament adjourned to tomorrow

எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளி: 2வது நாளாகவும் முடங்கியது நாடாளுமன்றம்!

Parliament
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் இரண்டாவது நாளாகவும் முடங்கியுள்ளது 
 
தற்போது நாடாளுமன்றத்தில் பணவீக்கம், பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிளப்பி வருகின்றனர் 
மேலும் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் மையப்பகுதிக்கு வந்து விட்டதால் நேற்று நாடாளுமன்றம் முடங்கியது
 
அதே பிரச்சினை காரணமாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
அடுத்த கட்டுரையில்
ஐரோப்பாவை பொசுக்கும் வெப்ப அலை..! ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!