திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 14 ஜூலை 2022 (18:31 IST)

நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள்: திடீர் பல்டி

om birla
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என்று ஒரு சில வார்த்தைகள் பட்டியலிடப்பட்ட நிலையில் தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லை என சபாநாயகர் தெரிவித்திருப்பது திடீர் பல்டியாக பார்க்கப்படுகிறது.
 
நாடாளுமன்றத்தில் பாஜக வை விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஒரு சில வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என ஒரு பட்டியலை நாடாளுமன்ற செயலாளர் வெளியிட்டிருந்தார்
 
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து தற்போது மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கமளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எந்த வார்த்தையையும் தடை செய்யப்படவில்லை என்றும் எம்பிக்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.