செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (12:07 IST)

எதிர்க்கட்சிகளின் கடும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

Parliament
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நேற்று முதல் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் 
 
மேலும் கைகளில் பதாகைகளை ஏந்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இயல்பான நடைமுறை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் வந்த எதிர் கட்சி எம்பிக்கள் ஊழலுக்கு எதிராகவும் பாஜக அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டு வருவதாகவும் இதனால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது