1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. P Chidambaram custody extended

சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..

ப சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் ப சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைக்கேட்டில் சிபிஐ தொடர்ந்த வழக்கில், ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து அவர் கடந்த ஆகஸ்து மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வழக்கை விசாரித்த நீதிமன்றம் செப்டம்பர் 5 வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்பு அவரது காவல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின்பு சிதம்பரம் ஜாமீனில் விடுவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் கடந்த 30 ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ப.சிதம்பரம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை நீட்டிக்க சிபிஐ அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அவரது காவலை அக்டோபர் 17 ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பல முறை முன் ஜாமீன் கோரியும் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
தேதியை குறித்த சியோமி; காத்திருங்கள் ரெட்மியின் புதிய படைப்பிற்காக...