இனி கூகுள் மேப்பில் பொது கழிப்பிடங்களை அறிந்துகொள்ளலாம்..
கூகுள் வரைபடத்தில் இனி பொது கழிப்பிடங்கள் சுட்டிக்காட்டப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு, மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில் “தூய்மை இந்தியா” (ஸ்வச்ச் பாரத்) திட்டம் தொடங்கப்பட்டது. இதனையடுத்து, இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லி, போபால், இந்தூர் ஆகிய நகரங்களில் கூகுள் மேப் மூலம் பொது கழிப்பிடங்களை அறியும் சோதனை முயற்சி தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது 2,300 க்கும் மேற்பட்ட நகரங்களில் 57,000 க்கும் மேற்பட்ட கழிப்பறைகளை கூகுள் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் பல கழிப்பறைகள் கட்டப்பட்டன. இந்நிலையில் கூகுள் மேப்பில் “public toilets near me” என டைப் செய்தால் அருகிலுள்ள பொதுகழிப்பிடத்தை சுட்டிக்காட்டும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.