செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2019 (13:11 IST)

150 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி..

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 150 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கு உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்ட மோடி, காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து தூய்மை இந்தியா திட்டத்தை குறித்து சிறிது நேரம் உரையாற்றினார். அதில், தூய்மை இந்தியா திட்டத்தை உலகமே பாராட்டுகிறது. நமக்கும் விருதும் அளிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 60 கோடி பேருக்கு கழிப்பறை வசதியை செய்து கொடுத்தை உலகமே வியந்து பார்க்கிறது என கூறினார்.

பின்பு மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். இந்த விழாவில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானியும் பங்கேற்றார். முன்னதாக ஐ.நா. சபையில், தற்போதைய காலத்தில் காந்தியின் தேவையை குறித்து நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மோடி, ஐ.நா. சார்பாக காந்தியின் தபால் தலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.