புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2019 (14:26 IST)

மகன் வாங்கி வைத்திருந்த மதுவை திருடிய தந்தை! – அடித்து துவைத்த மகன்!

கேரளாவில் தான் வாங்கி வைத்திருந்த மதுவை தனது தகப்பனார் திருடி குடித்ததால் ஆத்திரமடைந்த மகன், அவரை அடித்து துவைக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

கேரளா சுற்றுவட்டாரத்தில் பல பகுதிகளில் தந்தை – மகன் சண்டையிடும் வீடியோ வேகமாக பரவி வந்திருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமென அதிகாரிகள் சிலர் போலீஸாருக்கு அறிவுறுத்தியதின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

விசாரணையில் தந்தையை அடித்த மகன் பெயர் ரெவிஸ் என்பது தெரியவந்துள்ளது. ரெவிஸ் மது அருந்தும் பழக்கம் உடையவர். அதே போல அவரது தந்தையும் மது விரும்பியாக இருந்திருக்கிறார். ஒருநாள் ரெவிஸ் ஒரு மதுபாட்டிலை வாங்கி வந்து வீட்டின் ஒரு பகுதியில் மறைத்து வைத்துள்ளார். இதை கண்ட அவரது தந்தை யாருக்கும் தெரியாமல் அந்த மதுவை எடுத்து குடித்திருக்கிறார்.

வீடு திரும்பிய ரெவிஸ் மது பாட்டில் இல்லாததை கண்டு ஆத்திரமடைந்தார். அவரது தந்தையிடம் சென்று சண்டை போட்டிருக்கிறார். அவரது தந்தை நான் மது பாட்டிலை பார்க்கவே இல்லை என சாதித்திருக்கிறார். இதனால் கடும் கோபம் கொண்ட ரெவிஸ் தனது தந்தையை சரமாரியாக அடித்திருக்கிறார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை தடுத்து அவரது தந்தையை காப்பாற்றியுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் ரெவிஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுவுக்காக பெற்ற தந்தையையே மகன் அடித்து துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.