மாடியில் இருத்து குதித்த ஒருவன்; கொத்தாய் சிக்கிய ஐவர்; நகை திருட்டில் தொடர்பா?
லலிதா ஜூவல்லரியில் கொள்ளை போனது தொடர்பாக 6 வடமாநிலத்தவர்களை போலீஸார் விசாரணை வலையத்திற்குள் எடுத்துள்ளனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்திருந்த லலிதா ஜுவல்லரி நகை கடையில் இருந்து தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் நேற்று கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை கண்டுபிடிக்க போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் போலீஸார் விடுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டிருந்துக் கொண்டிருந்த போது, போலீசை கண்டதும் ஒருவன் மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சித்துள்ளான். மாடியில் இருந்து குதித்ததில் தலை மற்றும் காலில் அடி பட்டதால் தப்பிக்க முடியாமல் வலியில் துடித்துள்ளான்.
இதனால் சந்தேகத்தில் அந்த நபருடன் இருந்த ஐந்து பேரையும் போலீஸர கைது செய்துள்ளனர். அடிபட்டவனை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, 5 பேரை காவலில் எடுத்துள்ளனர். இவர்கல் 6 பேரும் ஜார்கண்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இதனைதொடர்ந்து இவர்களது புகைப்படத்தை ஜார்கண்ட் போலீஸாருக்கு அனுப்பி விசாரித்தனர். அப்போது இவர்கள் ஜார்கண்ட், கேரளா ஆகிய இடங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. எனவே, லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.