தொடர்புடைய செய்திகள்
- இயற்கையை பாதுகாக்கும் தூத்துக்குடி மக்கள்! – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
- அதீத எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய நேரமிது! – பிரதமர் மோடி எச்சரிக்கை!
- உருமாறிய ஒமிக்ரான் கொரொனா பரவலை தடுக்க .அதிகாரிகளுக்கு பிரமர் மோடி அறிவுறுத்தல்!
- விமான சேவைக்கு தடை வேண்டும்: மோடியை கோரும் கெஜ்ரிவால்
- புதிய வகை கொரோனா- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மோடி ஆலோசனை
நாடாளுமன்றத்தில் என்னென்ன பேசனும்... எதிர்க்கட்சிகள் ஆலோசனை
நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தது முதலாக நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டிஜிட்டல் கரன்சியை கட்டுப்படுத்தும் புதிய சட்ட மசோதா உள்ளிட்டவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கூட்டத்தொடருக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி நடைபெற உள்ள கூட்டத்தொடரில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயார். எதிர்கட்சிகளின் கேள்விக்கு உரிய பதில் அளிக்க தயாராக உள்ளேன். அனைவரும் அமைதியான முறையில் கூட்டத்தொடர் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆலோசனை மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் மாநிலங்களவை குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை நடந்தது. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் இன்று தொடங்கும் பாராளுமன்ற கூட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
