வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 நவம்பர் 2021 (11:23 IST)

அதீத எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய நேரமிது! – பிரதமர் மோடி எச்சரிக்கை!

உலக நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்னும் புதிய கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நிலையில் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதன் பாதிப்புகள் தென்பட தொடங்கியுள்ளன. இது உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று ஒமிக்ரான் வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஒமிக்ரான் வைரஸ் குறித்து கேட்டறிந்த அவர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசித்துள்ளார்.

அபாயத்திற்கு உரிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்வது குறித்தும், நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ள அவர் அதீத எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரம் இது என கூறியுள்ளார்.