திங்கள், 16 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (11:42 IST)

5,000-த்தை கடந்த ஒமிக்ரான் தொற்று... 2,000 பேர் டிஸ்சார்ஜ்!

5,000-த்தை கடந்த ஒமிக்ரான் தொற்று... 2,000 பேர் டிஸ்சார்ஜ்!
இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த ஒமிக்ரான் பாதிப்புகள் 5,488 ஆக பதிவாகியுள்ளது. 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் புதிய வகை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் கடுமையாக அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை 5,488 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,162 பேர் சிகிசைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
 
மகாராஷ்டிராவில் 1,367 பேரும், ராஜஸ்தானில் 792 பேரும், டெல்லியில் 549 பேரும், கேரளாவில் 486 பேரும், கர்நாடகாவில் 479 பேரும், மேற்குவங்கத்தில் 294 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 275 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.