1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Modi to have emergency meeting with state CM

அதிகரிக்கும் கொரோனா: மோடி இன்று அவசர ஆலோசனை!

கொரோனா
மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி காணொலி மூலமாக அவசர ஆலோசனையில் ஈடுபடுகிறார். 

 
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்திருந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 8 லட்சத்தை தாண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 2.50 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரொனா பாதிப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி காணொலி மூலமாக அவசர ஆலோசனையில் ஈடுபடுகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 401 போலீசாருக்கு கொரோனா