தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் அக்ஷய் குமார்… இந்த முறை மலையாள ஹிட் படம்!
- தள்ளிப் போகிறதா சூர்யா பாலா திரைப்படம்… சூர்யா எடுத்த முடிவு!
- மின்னல் முரளி தமிழ் ரீமேக்… இரண்டு கதாநாயகர்களுக்குள் போட்டி!
- ரெஜினாவின் கவர்ச்சி நடனப் பாடலுக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு!
- 31.71 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
கொரோனா தொற்றாளர்களை இரும்பு பெட்டி முகாமுக்குள் அடைக்கும் சீனா… வைரலாகும் வீடியோ!
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிகமாகி வருகின்றன. இதனால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுகின்றன.
கொரோனாவின் பிறப்பிடமாக அறியப்பட்ட சீனா மற்ற நாடுகளை விட வெற்றிகரமாக அதை சமாளித்து பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாமல் தப்பித்தது. ஆனால் இப்போது மீண்டும் வூகான் உள்ளிட்ட மாகாணங்களில் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறதாக சொல்லப்படுகிறது. விரைவில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் நடக்க உள்ளதால் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சிறிய இரும்பு பெட்டி முகாம்களில் தனிமைப்படுத்துவதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன. மிகச்சிறிய இரும்பு பெட்டிகளை வரிசையாக அமைத்து அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கட்டாய தனிமைப் படுத்துதலுக்கு உட்படுத்துவதாக கண்டனங்களும் எழுகின்றன.
அடுத்த கட்டுரையில்
