1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. No more photo in flight

விமானத்தினுள் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க அனுமதி மறுப்பு!

விமானம்
கோப்புப் படம்

விமானத்தின் உள்ளே அமர்ந்தவாறு புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க அனுமதி மறுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

விமானப் பயணத்தின் போது விமானம் டேக் ஆஃப் ஆவது மற்றும் இறங்குவது போன்றவற்றை இனி வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுபோலவே விமானத்தின் உள் பகுதியிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் ஏற்கனவே இருந்தாலும் இனிமேல் கடுமையாக பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் அடுத்த நாளில் இருந்து  குறிப்பிட்ட வழித்தடத்தில் அந்த விமானத்தை இயக்குவதற்கு 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.