நீட் பிரச்சினை அரசியலை நீட்டா சமாளிப்போம்! – எச்.ராஜா பேச்சு
தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்வதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்து படிப்புக்கான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. முன்னதாக நீட் மன உளைச்சலாம் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியே மறையாத நிலையில் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் உயிரிழப்பதற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள தமிழக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா “நீட்டை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் அதை நீட்டாக கையாள்வதற்கு பாஜக தயாராக உள்ளது. நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது துரதிர்ஷ்டவசமானது. அதேசமயம் பிணத்தை வைத்து திமுக அரசியல் செய்வது அநாகரிகத்தின் உச்சம்” என்று கூறியுள்ளார்.