வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2020 (16:39 IST)

6 வருடங்களுக்குப் பின் தமிழ் படத்தில் நடிக்கும் மலையாள நடிகர்!

தமிழ் சினிமாவில் கடைசியாக காவியத்தலைவன் படத்தில் நடித்த நடிகர் பிருத்விராஜ் மீண்டும் நடிக்க உள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகி வருகின்றன. மலையாள நடிகராக இருந்தாலும், மொழி, வெள்ளித்திரை, ராவணன் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் பிருத்விராஜ். கடைசியாக அவர் நடித்த நேரடி தமிழ்ப்படம் காவியத்தலைவன்.

அந்த படம் படுதோல்வி அடைந்ததால் அதன் பிறகு தமிழ் படங்ஜளில் அவர் நடிக்கவில்லை. இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.