திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 12 செப்டம்பர் 2020 (17:00 IST)

கார் பார்க்கிங்காக மாறிய மைதானத்தின் பார்வையாளர் பகுதி! வைரலான புகைப்படம்!

கொரோனா காரணமாக மைதானங்களில் ஆளில்லாமல் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.

கடந்த 5 மாதங்களுக்கு பிறகு ஒரு மாதமாகதான் கிரிக்கெட் போட்டிகள் நடக்க ஆரம்பித்துள்ளன. ஆனால் மைதானத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் மைதானமே வெறிச்சோடி காணப்படுகிறது.  இந்நிலையில் மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தைக் கார் பார்க்கிங்காக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.


நேற்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் பில்லிங்ஸ் அடித்த சிக்சர் இந்த பகுதிக்குள் சென்று விழ அதை மிட்செல் மார்ஷ் சென்று எடுத்து வந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.