தொடர்புடைய செய்திகள்
- அறிமுகப் போட்டியிலேயே 5 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்திய ஆஸி பவுலர்!
- சதமடித்த பின் ஆட்டமிழந்த ரோஹித் ஷர்மா.. ஆக்ரோஷம் காட்டும் ஆஸி. பவுலர்கள்!
- இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ட்ரோன் : சுட்டு வீழ்த்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்
- முதன்முதலாக இந்தியாவில் 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிப்பு.. இயற்கை கொடுத்த புதையல்
- ரோஹித் சர்மா அசத்தல் சதம்.. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் விபரம்..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க புதிய திட்டம் !
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க பயோமெட்ரிக் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் உள்ள பிரபலமான கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில். இந்தக் கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட், அறைகள், டிக்கெட் அதிக விலைக்கு விற்பது போன்றவை ஒதுக்குவதில் இடைத்தரகர்கள் மூலம் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், இந்த முறைகேடுகளைத் தவிர்க்க பயோமெட்ரிக் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போது, ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கும் அறைகள் குறித்து, அவர்களின் செல்போனுக்கு ஓடிபி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், இதிலும் சில முறைகேடுகள் நடப்பதாக கூறப்படும் நிலையில், இனிமேல், பக்தர்களின் முகத்தை அடையாளம் காணப்படும் அல்லது பயோமெட்ரிக் முறையில் பக்தர்களின் கைரேகையை பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
