சதமடித்த பின் ஆட்டமிழந்த ரோஹித் ஷர்மா.. ஆக்ரோஷம் காட்டும் ஆஸி. பவுலர்கள்!
ரோஹித் ஷர்மா 120 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து இந்தியா ஆடி வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியை 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதன் பின்னர் ஆடிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சிறப்பாக பேட் செய்த ரோஹித் சதமடித்து அசத்தினார். 120 ரன்கள் சேர்த்த அவர் பேட் கம்மின்ஸ் பந்தில் பவுல்ட் ஆகி வெளியேறினார். தற்போது இந்திய அணி 7 விக்கெட்கள் இழந்து 250 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. ஜடேஜா 45 ரன்களோடு களத்தில் விளையாடி வருகிறார்.