1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 24 டிசம்பர் 2022 (15:53 IST)

தரிசனத்திற்கு கொரோனா தடுப்பூசி சான்று: திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

tirupathi
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் இல்லையேல் கொரோனா வைரஸ் தங்களுக்கு இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அப்போது தான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருந்ததாக சற்றுமுன் செய்திகள் வெளியானது. 
 
இந்த நிலையில் இந்த செய்திக்கு தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தடுப்பூசி சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்பது அதிகாரபூர்வமான அறிவிப்பு அல்ல என்றும் இணையதளத்தில் தவறுதலாக அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது
 
இதனையடுத்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கொரோனா வைரஸ் தடுப்பூசி சான்றோ அல்லது நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
 
Edited by Mahendran