1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. neet practice student suicide un UP state

நீட் பயிற்சி வகுப்பு சென்ற 20 வயது மாணவர் தற்கொலை.. ராஜஸ்தானில் சோகம்..!

நீட் பயிற்சி
தமிழகத்தில் நீட் பயிற்சி பயம் காரணமாக ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் வெளி மாநிலத்தில் தற்போது தற்கொலை தொடர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 20 வயது மாணவர் ஒருவர் கடந்த ஒரு வருடமாக நீட் பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது

அவரது குடும்பத்தினர் அந்த மாணவருக்கு பலமுறை தொலைபேசியில் பேசியும் பதில் அளிக்காத நிலையில் அவரது நண்பர்களுக்கு தொடர்பு கொண்ட போது தான் அவரது அறைக்கு சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது

இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் நீட் பயிற்சி காரணமாக மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது

கடந்த ஒரு வருடத்தில் நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் இன்னொரு மாணவன் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஞானவாபி தொடர்ந்து இன்னொரு மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு..சரஸ்வதி கோயில் இருந்ததா?