திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2023 (12:39 IST)

கோட்டாவில் தொடரும் நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை

NEET
ராஜஸ்தான்  மாநிலம் கோட்டாவில் நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே பனிரென்டாம் வகுப்பு முடித்த பின், மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் சேர்ந்து இதற்கெனப் பிரத்யேகமாகப் படித்து நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அப்படிப்பில் சேர்ந்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு பயம் மற்றும் தோல்வி பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து வருவது அதிகரித்து வரும் நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக, அதிமுக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
 
இந்த நிலையில்,  ராஜஸ்தான்  மாநிலம் கோட்டாவில் நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள கோட்டா மாவட்டத்தில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
இந்த ஆண்டு அந்த மாவட்டத்தில் நுழைவுத் தேர்வு பயிற்சி மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.