வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 ஜூன் 2023 (15:05 IST)

ஆன்லைன் செயலியில் லோன் வாங்கிய கல்லூரி மாணவர் தற்கொலை.. நாமக்கல் அருகே அதிர்ச்சி..!

ஆன்லைன் செயலியில் லோன் வாங்கிய நாமக்கல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாமக்கல் அருகே செல்லப்பா காலனி என்ற பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் யோகேஸ்வரன். 22 வயதான இவர் ஆன்லைன் செயலியில் 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது. 
 
கடனை செலுத்த முடியாததை அடுத்து கடன் கொடுத்த நிறுவனம் அவரது மொபைல் போன் காண்டாக்ட்டில் உள்ள அனைவருக்கும் போன் செய்து டார்ச்சர் செய்துள்ளதாக தெரிகிறது. 
 
ஒரு கட்டத்தில் லோகேஸ்வரன் பெற்றோரையும் தொடர்பு கொண்டு பணம் செலுத்த கூறியுள்ளதால் பெற்றோர்கள் லோகேஸ்வரனை கண்டித்து உள்ளனர். இந்த நிலையில் தான் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிய வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான லோகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாமக்கல் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran